Some of us speak in cliches. Some of us love.
Wednesday, October 12, 2011
இப்பொழுதின் இத்-தனம்
அப்பொழுதின் அத்-தனத்தைப் போலவே
இருப்பதாகத் தோன்றிற்று. அத்தனை
சிந்திப்பில் இப்பொழுது நழுவி
அப்பொழுதாயிற்று. இத்தனை
வேகமாய் விடைபெற்ற அப்பொழுதும்
இப்பொழுது அதன் அத்-தனத்தைக்
கைவிட்டு விலகிற்று
நினைவின் மெத்தனத்தில்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment